For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இஷா அம்பானியின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர், நடிகை..!! விலை எவ்வளவு தெரியுமா..? அப்படி என்ன ஸ்பெஷல்..!!

02:46 PM Apr 02, 2024 IST | Chella
இஷா அம்பானியின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர்  நடிகை     விலை எவ்வளவு தெரியுமா    அப்படி என்ன ஸ்பெஷல்
Advertisement

அம்பானி குடும்பத்தில் எந்த சம்பவம் நடந்தாலும், அது உலக ஃபேமஸ் ஆகிவிடுகிறது. அப்படித்தான் இப்போதும் ஒரு சமாச்சாரம் நடந்து, பலரது வாயை பிளக்க வைத்து வருகிறது.

Advertisement

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவர் ரிலையின்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை நிர்வகித்து வருகிறார். இப்போது இஷாவுக்கு 32 வயதாகிறது.. கடந்த 2018ஆல் இவருக்கு திருமணம் நடந்து தற்போது, கிருஷ்ணா, ஆதியா என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். இஷா அம்பானி கடந்த வருடம் முக்கிய பொறுப்பை பெற்ற பிறகு, அதன் மூலம் மட்டுமே, நல்ல வருவாய் அவருக்கு கிடைத்து வருகிறது. அதாவது, ஒரு மாதத்திற்கு ஈவுத்தொகை லாபத்தை சேர்க்காமல் வெறும் வருவாய் மட்டும் ரூ.35 லட்சம் என்கிறார்கள்.. அப்படியானால், ஈவுத்தொகை லாபத்தை சேர்க்காமல் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.4.2 கோடியாம்.

சிஇஓ-ஆக இருக்கும் ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் மதிப்பு மட்டும் 8 ஆயிரத்து 361 லட்சம் கோடி ரூபாயாகும். இந்தியாவின் முதல் 4 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று என்பது மிக முக்கியமான விஷயமாகும். இந்நிலையில், இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை, ஒரு ஹாலிவுட் நடிகர் விலைக்கு வாங்கியிருக்கிறாராம். அதாவது, கர்ப்பமாக இருந்தபோது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில்தான் இஷா அம்பானி நிறைய ஓய்வில் இருந்தாராம். கர்ப்பிணி மகளை, அந்த நேரத்தில் அருகில் இருந்து கவனித்து கொண்டது நீதா அம்பானிதான். அந்த இரட்டைகள் பிறந்ததும் இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில்தான்.

இந்த 2 குழந்தைகளும் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார்கள்.. பிளே ஸ்கூலுக்கு போக ஆரம்பித்துவிட்டார்கள்… அதுவும் முதல் நாள் இஷாவும், ஆனந்தும் ஒன்றாக சேர்ந்து வந்து, தங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இப்போதும்கூட, பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு செல்கிறார் இஷா. அப்படி வரும்போது, எத்தனையோ முறை, ஸ்கூலுக்கு வெளியே, மற்ற பெற்றோர்களுடன் காத்திருக்கிறார். இந்த போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இஷாவின் இந்த லாஸ்ஏஞ்சல்ஸ் வீட்டைதான், பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், அவரது காதலி நடிகை ஜெனிஃபர் லோபஸும் சேர்ந்து ரூ. 500 கோடிக்கு வாங்கியுள்ளார்களாம். 500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் இந்த வீட்டில் அப்படியென்ன ஸ்பெஷலாட்டி உள்ளது தெரியுமா? இந்த பங்களா மொத்தம் 38 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.. மொத்தம் 12 படுக்கையறைகள், 24 பாத்ரூம்கள், ஜிம், ஸ்பா, பேட்மிண்டன் கோர்ட் இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளதாம்.. இந்த செய்திதான், தற்போது இந்தியா மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Read More : Sania Mirza | காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் சானியா மிர்சா..? எந்த தொகுதியில் தெரியுமா..?

Advertisement