முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐபிஎல் பெட்டிங்கால் சீரழிந்த குடும்பம்! கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு...

04:18 PM Mar 27, 2024 IST | Baskar
Advertisement

ஐபிஎல் பெட்டிங்கில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்து கணவன் தவித்த நிலையில், கடன் அளித்தவர்கள் தொந்தரவு காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் பாபு. என்ஜினியரான இவருக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. நன்கு படித்த நல்ல வேளையில் இருந்தாலும் தர்ஷன் பாபு ஐபிஎல் பெட்டிங்கில் ஆர்வமாக ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது போல ஒரே போட்டியில் கோடீஸ்வர் ஆகிவிடலாம் என்று தர்ஷன் பாபுவின் நண்பர்களும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள். இதனால், ஐபிஎல் பெட்டிங் என்ற சூதாட்ட வலையில் விழுந்த தர்ஷன் பாபு பல லட்ச கணக்கான ரூபாய்களை பெட் கட்டி பெரும் நஷ்டம் அடைந்து வந்து இருக்கிறார்.

தர்ஷன் பாபு ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபடுவது அவரது மனைவிக்கு சுத்தமாக படிக்காமல் இருந்துள்ளது. இதனால், கணவரிடம் இது பற்றி பலமுறை பேசியிருக்கிறார். ஆனாலும் தர்ஷன் பாபு காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. 2021 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். பெட்டிங்கில் பணத்தை இழந்ததும் கடன் வாங்கி மீண்டும் பெட்டிங்கில் ஈடுபடுவாராம்.

தன்னிடம் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டதால், கடன் வாங்கியும் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படியாக ரூ.1.5 கோடி வரை பணம் கடனாக பெற்று தர்ஷன் பாபு பெட் கட்டியுள்ளார். ஆனால் அனைத்து பணத்தையும் இழந்து பெரும் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால், அவருக்கு கடன் கொடுத்தவர்களும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். தர்ஷன் பாபுவின் மனைவியிடமும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வந்துள்ளனர்.

1 கோடி ரூபாய் வரை இருந்த கடனை தர்ஷன் பாபு அடைத்து விட்ட போதிலும் மீதமுள்ள 84 லட்ச ரூபாயை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துள்ளர். பணம் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக பணத்தை கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், மன வேதனை அடைந்த ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டார்.

ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை கடிதத்தில், தனக்கு கொடுக்கப்பட்ட தொந்தரவுகள் பற்றி எழுதி வைத்துள்ளாராம். இந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

தனது புகாரில், பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ததே ரஞ்சிதா இத்தகைய முடிவு எடுக்க காரணம் என்றும், தர்ஷனுக்கு ஆர்வம் இல்லாத போதும் அவருக்கும் பணம் கொடுத்து பெட்டிங்கில் ஈடுபட வைத்ததாக 13 நபர்களின் பெயரையும் மனுவில் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் பெட்டிங்கில் மூழ்கி கிடந்த கணவனது செயலால் வேதனை அடைந்து இளம் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Next Article