முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Lok Sabha | "குடும்ப அரசியல், ஊழல்,மோசடி இதுதான் திமுக அரசின் சாதனை" - நெல்லை பிரச்சாரத்தில் மோடி குற்றச்சாட்டு.!

06:11 PM Apr 15, 2024 IST | Mohisha
Advertisement

Lok Sabha: இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவடையே இருக்கிறது. வர இருக்கின்ற ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்காக இந்திய பிரதமர் மோடி தீவிரமாக பாடுபட்டு வருகிறார் .

தமிழகத்தில் 2 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் தற்போது மூன்றாவது சுற்று பயணமாக தென் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நடைபெற்ற பாஜகவின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தில் ஆளும் திமுக அரசால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் ஊழல் மற்றும் மோசடி பெருகுவதற்கு இங்கு நடைபெற்று வரும் குடும்ப அரசியல்தான் காரணம் என மக்களிடம் சுட்டிக்காட்டினார். மேலும் சமீப காலமாக போதை பொருள் பயன்பாடும் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதாக மக்களிடம் தெரிவித்தார். இவற்றிற்கு எதிராக தமிழக மக்கள் பாஜகவை ஆதரிப்பதை காண முடிகிறது என தெரிவித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் தனக்கு கிடைக்கும் சிறப்பான வரவேற்பே இதற்கு சாட்சி என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Read More: PMO MODI | நெல்லையில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிரதமர் மோடி.!! தென் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்.!!

Tags :
BJPDmkElection 2024nellaiPM Modi
Advertisement
Next Article