மோசடிகள்..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக் வைத்த மத்திய அரசு..!! அனைவரும் கண்டிப்பா இதை பண்ணனும்..!!
நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் பெற KYC (Know your customer)ஐ அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகமானவர்கள் மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இருந்தாலும், பலர் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்டிருப்பதாக புகார்கள் எழுகின்றன. இறந்தவர்களின் பெயரை நீக்காமல் இருப்பது, திருமணமான பிறகு பெண்களின் பெயரை புகுந்த வீட்டிலும் சேர்த்துவிட்டு தாயார் வீட்டிலிருந்து பெயரை நீக்காமல் இருப்பது என பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக கேஒய்சி செய்ய வேண்டும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவோ அல்லது ரேஷன் கடைகளிலோ நேரடியாக சமர்ப்பித்து கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம். முதலில் இதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களுடைய ரேஷன் அட்டையில் கேஒய்சி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி செய்து கொள்ளவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகும் சூழல் ஏற்படும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று தங்களுடைய கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம்.
Read More : கள்ளக்காதலால் இரு வீட்டிலும் வெடித்த சண்டை..!! கதவை பூட்டிக் கொண்ட கணவன் – மனைவி..!! திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!