For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தவறான விளம்பரம்... பிரபல ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம்...!

False advertisement... Famous IAS academy fined Rs 5 lakh
10:43 AM Sep 02, 2024 IST | Vignesh
தவறான விளம்பரம்    பிரபல ஐ ஏ எஸ் அகாடமிக்கு ரூ 5 லட்சம் அபராதம்
Advertisement

சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு சிசிபிஏ ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Advertisement

யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு எதிராக தலைமை ஆணையர் நிதி கரே, ஆணையர் அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தவறான விளம்பரம் செய்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு சிசிபிஏ ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளை மீறும் எந்தவொரு பொருள் அல்லது சேவைக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி தனது விளம்பரத்தில் அகில இந்திய அளவில் 933 பேரில் 336 பேர் தேர்வு" "முதல் 100 இடங்களில் 40 பேர்" "தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அவர்களில் 37 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள்.""இந்தியாவின் சிறந்த ஐஏஎஸ் அகாடமி" சங்கர் ஐஏஎஸ் அகாடமி பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றே விளம்பரத்தில் மறைக்கப்பட்டதை சி.சி.பி.ஏ கண்டறிந்தது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி தனது பதிலில், யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ல் 336 தேர்வர்களுக்கு மாறாக 333 தேர்வர்களின் விவரங்களை மட்டுமே சமர்ப்பித்தது. உரிமைகோரப்பட்ட 336 மாணவர்களில், 221 பேர் கட்டணமில்லா நேர்காணல் வழிகாட்டல் திட்டத்தை எடுத்தனர், 71 பேர் முதன்மைத் தேர்வு தொடரை எடுத்தனர், 35 பேர் தொடக்கத் தேர்வு தொடரை எடுத்தனர், 12 பேர் பொதுப்பாடங்களில் தொடக்க மற்றும் முதன்மைத் தேர்வை எடுத்தனர், 4 பேர் தொடக்கத் தேர்வு தொடரை வேறு சில முதன்மைப் பாடத் திட்டங்களுடன் (விருப்ப மற்றும்/அல்லது ஜிஎஸ்) எடுத்தனர். இந்த உண்மை அவர்களின் விளம்பரத்தில் வெளிப்படுத்தப்படவில்லை.

இதனால் நுகர்வோரை ஏமாற்றியுள்ளனர். இந்த முக்கியமான உண்மையை மறைப்பதன் மூலம், தேர்வர்களின் வெற்றியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பங்கு தெளிவாக தெரியப்படுத்தாமல், தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு, நியாயமற்ற வர்த்தக நடைமுறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தகவல் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையை இந்த விளம்பரம் மீறியுள்ளது. இதன் காரணமாக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement