30 நாள் தான் டைம்...! பயிற்சி நிறுவனங்கள் குறித்து தவறான விளம்பரம்...! செக் வைக்கும் மத்திய அரசு...!
பயிற்சி நிறுவனங்கள் குறித்து தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் பற்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது. நுகர்வோர் நலத் துறையின் இணையதளத்தில் வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் கருத்துகள் அல்லது பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் (அதாவது 2024, மார்ச் 16 வரை) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் அளிக்கலாம்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 2024, ஜனவரி 8 அன்று பயிற்சி நிறுவனங்களில் தவறான விளம்பரம் செய்யப்படுவது குறித்த பங்கெடுப்பாளர்களின் ஆலோசனையை நடத்தியது. பயிற்சி நிறுவனங்களின் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்கள், பயிற்சி நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள், அரசு மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்கெடுப்பாளர்களுடன் விரிவான விவாதங்களுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டு, தற்போது பொது ஆலோசனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் பிரிவு 18 (2) (எல்) இன் கீழ் வெளியிடப்படும்.
வரைவு வழிகாட்டுதல்கள் "பயிற்சி" என்பதைக் கல்வி, அறிவுறுத்தல்கள் அல்லது கல்வி ஆதரவு அல்லது கற்றல் திட்டம் அல்லது எந்தவொரு நபரும் வழங்கும் வழிகாட்டுதல் என்று வரையறுக்கிறது. தவறான விளம்பரங்களுக்கான நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன. பயிற்சியில் ஈடுபடும் எந்தவொரு நடைமுறையையும் மீறினால், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடப்பட்டவராக கருதப்படுவர்.
பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு நபருக்கும் வழிகாட்டுதல்கள் பொருந்தும். பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். இதனை https://consumeraffairs.nic.in/sites/default/files/fileuploads/latestnews/Public Comments Letter 2.pdf என்ற இணைப்பில் காணலாம்.