பக்கத்து வீட்டுக்காரரின் 2-வது மனைவியுடன் கள்ள உறவு..!! திருமணத்திற்கு பிறகும் அடங்காத ஆசை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (45). இவரது முதல் மனைவி குமாரி என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, திண்டிவனம் அடுத்த நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த மகாராணி (35) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு 2 ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், இரண்டாவது மனைவிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், 2-வது மனைவி மகாராணி என்பவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, செந்திலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பின்பு இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதனால், செந்தில் குடும்பத்தில் பிரச்சனை வெடித்துள்ளது. அவரது குடும்பத்தினர் குமார் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக பலமுறை முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று செந்தில் உறவினர்கள் குமார் குடும்பத்தினரிடம் இது குறித்து கேட்டபோது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து அனுப்பி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வீட்டு கதவை தட்டியபோது கதவை திறக்காததால் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் - மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இருவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.