For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல நடிகருடன் கள்ள உறவு..!! ’கோடான கோடி’ பாடல் நடிகைக்கு ரெட் கார்ட்..!! வசமாக சிக்கியது எப்படி..?

Actress Nikitha was banned from acting in Kannada cinema for 3 years after being involved in a fake relationship.
05:12 PM Jun 07, 2024 IST | Chella
பிரபல நடிகருடன் கள்ள உறவு     ’கோடான கோடி’ பாடல் நடிகைக்கு ரெட் கார்ட்     வசமாக சிக்கியது எப்படி
Advertisement

கள்ள உறவில் ஈடுபட்டதால், நடிகை நிகிதா கன்னட சினிமாவில் நடிக்க 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Advertisement

பகத் பாசில் ஹீரோவாக அறிமுகமான 'கையேதும் தூரத்து' என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிகிதா துக்ரல். இப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் நிகிதா. விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், நிகிதாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது சரோஜா படம் தான். வெங்கட் பிரபு இயக்கிய அப்படத்தில் ‘கோடான கோடி’ என்கிற பாடலுக்கு நிகிதா ஆடிய கவர்ச்சி நடனம் படு ஹிட் ஆனது.

பின்னர், கன்னட படங்களில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ தர்ஷனுக்கும் நிகிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் நடிகர் தர்ஷன் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு மனைவி, குழந்தை உள்ளது. தர்ஷன் - நிகிதா இடையேயான கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, தர்ஷனின் மனைவி போலீஸில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அவரை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்தி தர்ஷனை போலீசார் கைது செய்தனர். மறுபுறம் நடிகை நிகிதா கன்னட சினிமாவில் நடிக்க தடை விதிக்க வலியுறுத்தியும் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன்படி, நிகிதா கன்னட சினிமாவில் நடிக்க 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், அவர் மீதான தடை நீக்கப்பட்டாலும் மார்க்கெட் போனதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த நிகிதா, கடந்த 2017ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Read More : இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!! இனியாவது உஷாரா இருங்க..!!

Tags :
Advertisement