முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூம் போட்ட கள்ளக்காதல் ஜோடி..!! போனை பார்த்து ஆடிப்போன காதலன்..!! திடீரென கழுத்தை நெரித்துக் கொன்ற பரபரப்பு சம்பவம்..!!

It was revealed that Sangeeta was in contact with many people. Enraged by this, Jayaraj got into a heated argument with Sangeeta.
10:43 AM Jan 25, 2025 IST | Chella
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் வெளியான தகவலின்படி, மதுராந்தகம் சுக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (28). கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சங்கீதா (32).

Advertisement

இருவருக்கும் ஏற்கனவே தனித்தனியாக திருமணமான நிலையில், ஜெயராஜ் - சங்கீதா இருவரும் கள்ள உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால், இருவரும் நேற்று முன் தினம் மாமல்லபுரத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அந்த சமயத்தில், ​​சங்கீதா கழிப்பறைக்குச் சென்றபோது, ​​அவருடைய செல்போனை ஜெயராஜ் எடுத்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதில், சங்கீதா பலருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ், சங்கீதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சங்கீதாவை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையறிந்த ஜெயராஜ், சங்கீதா தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம் ஆடினார். ஆனால், பிரேத பரிசோதனையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார் ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சங்கீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், ஜெயராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், ஏற்கனவே திருமணமான சங்கீதாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், ஜெயராஜுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, பயத்தில் ஜெயராஜும் தற்கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Read More : சென்னை லயோலா கல்லூரியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Tags :
கள்ளக்காதல்செங்கல்பட்டு மாவட்டம்திருமணம்
Advertisement
Next Article