For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

போலி பில் தயாரிப்பு..!! ஜிஎஸ்டி பதிவை முடக்க பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு..!!

08:57 AM Feb 10, 2024 IST | 1newsnationuser6
போலி பில் தயாரிப்பு     ஜிஎஸ்டி பதிவை முடக்க பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு
Advertisement

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில், போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement