முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தோல்வி காத்திருக்கிறது… 3வது தொகுதியை தேர்ந்தெடுங்க..! - ராகுல் காந்தியை கிண்டல் செய்த மோடி

06:31 AM May 04, 2024 IST | Baskar
Advertisement

உத்தப்பிரதேசம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தோல்வி நிச்சயம் என பிரதமர் மோடி கிண்டலாக பேசியுள்ளார்.

Advertisement

மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. ரேபரேலி தொகுதி எம்.பியாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளதால், அந்த தொகுதியில், சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்கக்கூடும் என கூறப்பட்டது. மேலும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது.அமேதி தொகுதிக்கு பதிலாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கி உள்ளது தேர்தல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமேதி To ரேபரேலி: காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், 2004 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில், அமேதி தொகுதியில் இம்முறை போட்டியிடாத ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் களம் காண்கிறார். கேரளா மாநிலம் வயநாடு தொகுதியை தொடர்ந்து 2ஆவது தொகுதியாக ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுவையும் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தி, அமேதியை தவிர்த்துவிட்டு ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்,“வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருந்தார். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார்.வயநாடு தொகுதியில் தோல்வி உறுதி என்பது ராகுல் காந்திக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டது. இதனால் அவர் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியிலும் அவருக்கு தோல்வி காத்திருக்கிறது.

அடுத்து அவர் மூன்றாவது தொகுதியை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து ராஜ்யசபா எம்.பி ஆகி உள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று பயப்பட வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். பயந்து ஓடி ஓளிய வேண்டாம்” என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

Read More: “உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி” – தோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட முஸ்தபிசுர் ரஹ்மான்!!

Tags :
modi vs rahulஅமேதி To ரேபரேலி
Advertisement
Next Article