முகத்தில் பருக்கள் அதிகமா இருக்கா?? அப்போ இதை உடனே செய்து பாருங்கள்..
பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முகப்பரு தான். பெண்கள் ஆண்கள் என அனைவருக்கு இந்த பிரச்சனை உள்ளது. முகப்பருக்கள் பொதுவாக சரும வகை, உணவு, கிருமி, தூசி போன்ற பல காரணங்களால் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் முகப்பருவால் அதிகம் சிரமப்படுவார்கள். இப்படி முகம் முழுவதும் பருக்கள் இருப்பதானால் வலி ஏற்படுவது மட்டும் இல்லாமல், ஒருவரது அழகை கெடுக்கும். இதனால் சில நேரங்களில் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். இப்படி முகத்தில் பருக்கள் அதிகம் ஏற்பட எண்ணெய்ப்பசை ஒரு காரணமாக இருப்பதால், இந்த எண்ணெய் பசையை சுலபமாக நீக்க ஒருசில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். இப்போது முகப்பருவைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்: இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில், 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றை சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். பின்பு முகத்தை சுத்தமாக கழுவி விட்டு, கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் குறைய துடங்கி வடும். இதை நீங்கள் வாரம் 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்: இதற்க்கு முதலில் ஒரு பௌலில் 1/2 கப் கெட்டி தயிரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். பின்பு முகத்தை சுத்தமாக கழுவி விட்டு, கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவோடு பளிச்சென்றும் பருக்களின்றியும் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.
Read more: உங்கள் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டுமா? அப்போ இந்த மீனை கண்டிப்பா கொடுங்க..