பேஸ்புக் புதிய அப்டேட்! என்னனு தெரியுமா?
வீடியோ வசதியை அதிகரிப்பதன் மூலம் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்கலாம் என கருதி மெட்டா நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் போன்று, பேஸ்புக்கில் ஃபுல் ஸ்கீரீன் வீடியோ பிளேயரை அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் புதிய வீடியோ பிளேயர் அப்டேட் மூலம் குறுகிய மற்றும் நீண்ட வீடியோக்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன் அறிமுகப்படுத்த இருக்கிறது என்று கூறப்படுகிறது.
வீடியோ பிளேயர் டீஃபால்டாக வெர்டிகல் வியூவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், லேண்ட்ஸ்கேப் வியூவில் முழு திரையில் வீடியோவைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்கும். வீடியோ பிளேயர் முதலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அறிமுகப்படுத்தப்படும். மற்ற நாடுகளில் பிளேயர் எப்போது கிடைக்கும் அப்டேட் ஆகும் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
பேஸ்புக் பயனர்களுக்கு அடுத்து பார்ப்பதற்கு மிகவும் பொருத்தமான வீடியோக்களை பரிந்துரைக்கும் அம்சமும் இருக்கும். பயனர்கள் பேஸ்புக்கில் வீடியோக்களைப் பார்ப்பது அதிகமாக இருப்பதால், வீடியோ வசதியை அதிகரிப்பதன் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்கலாம் என்று மெட்டா நிறுவனம் கருதுகிறது.
வீடியோ பிளேயர் வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பேஸ்புக் யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களுடன் போட்டியிட ரெடியாகி இருக்கிறது என்று கூறப்படுகிறது.