நேருக்கு நேர் சவாலானது!… இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!… ரோகித் ஷர்மா பேச்சு!
India VS Pakistan: வெற்றிபெறுவதற்கு சிறப்பாக விளையாடுவதுதான் முக்கியமே தவிர, எதிரணியோ ஆடுகளமோ இல்லை என்றும் இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என்றும் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேசியுள்ளார்.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியை ஒட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. மறுபுறம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு இந்தியாவுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய முயலும். அதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தவே இந்தியா நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்தநிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா, வெற்றிபெறுவதற்கு சிறப்பாக விளையாடுவதுதான் முக்கியமே தவிர, எதிரணியோ ஆடுகளமோ இல்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடினோம். இன்று டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போது சவாலாக இருக்கும் என்று கூறினார்.
Readmore: தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை…!