அதிதீவிரமடைந்த Mpox வைரஸ்!. 116 நாடுகளில் நோய் தாக்கம்!. தடுப்பது எப்படி?
Mpox: மேற்கு காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய வைரஸ், தற்போது 116 நாடுகளில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானம் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
எம்.பாக்ஸ் வைரஸ் என்னும் குரங்கம்மை சரவதேச அளவில் தற்போது வரை 14 ஆப்ரிக்க நாடுகளில் அதிதீவிரமாக பரவியுள்ள எம். பாக்ஸ் வைரஸ், 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 524 மரணங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 முறைகள் உலகளவில் எம்.பாக்ஸ் வைரஸ் பரவி இருக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய வைரஸ், தற்போது 116 நாடுகளில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானம் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உடையோர் ஆகியோரை தாக்கும் குரங்கம்மை (Monkey Pox Mpox), சிறிய அளவிலான கொப்புளங்களுடன் தோன்றும். 21 நாட்கள் வரை மனிதர்களை பாதிக்கும் தன்மை கொண்ட குரங்கம்மை, குணமாகிவிடும் எனினும், உரிய மருத்துவ சிகிச்சை பெறும் பட்சத்தில் உயிரிழப்புகளும் தடுக்கலாம். மத்திய & மேற்கு ஆப்பிரிக்காவில் 1970களில் இருந்து மிகப்பெரிய தொற்றாக கவனிக்கப்படும் எம். பாக்ஸ், அவ்வப்போது சர்வதேச அளவிலும் பரவி வருகிறது.
காய்ச்சல், தசை வலி, தொண்டை புண், அரிப்பு, வலி சொறி, தலைவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு போன்றவை எம். பாக்சின் அறிகுறியாக கவனிக்கப்படுகிறது. இவ்வாறான புண்கள் உள்ளங்கை, உள்ளங்கால், முகம், வாய், தொண்டை, பிறப்புறுப்பு, ஆசனவாய் ஆகிய இடஙக்ளில் தோன்றும். பாதிக்கப்பட்ட நபரின் உடலில் தோன்றும் திரவம், பின் வெடித்து உடலில் பரவும்.
குரங்கு அம்மை எதனால் ஏற்படுகிறது? - குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன.
முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் (காங்கோவைச் சுற்றியுள்ள நாடுகள்), இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன. இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இது வரை ஒரே நாட்டில் இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் கண்டறியப்பட்டது கேமரூனில் மட்டுமே.