காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு... இன்று அறிவிப்பு வெளியாகும்...! அமைச்சர் குட் நியூஸ்..
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என திருச்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது. அதில், 220 வேலை நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வரை மட்டுமே வேலை நாட்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதனை 220 ஆக மாற்றி அறிவித்ததற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் நடந்துவருகிறது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாள்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்ளுக்கு செப்டம்பர் 27-ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ளது. மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பட்டுள்ள கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என திருச்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.