For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மறுஆய்வு...! கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள்...!

09:04 AM Nov 01, 2023 IST | 1newsnationuser2
கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மறுஆய்வு     கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள்
Advertisement

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023, ஆகஸ்ட் 08 அன்று "ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் மறுஆய்வு" குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் 05 செப்டம்பர் 2023 ஆகவும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 19 செப்டம்பர் 2023 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

அவ்வப்போது கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே10 அக்டோபர் 2023 மற்றும் 25 அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டது .மேற்குறிப்பிட்ட ஆலோசனைப் பத்திரத்தில் மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களிடமிருந்து கோரிக்கை வந்தது.

அதன் அடிப்படையில், மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2023 நவம்பர் 1 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கக் கோரும் எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாது என்பதால் அனைவரும் கருத்துக்களை advbcs-2@trai.gov.in மற்றும் jtadvbcs-1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இன்றைக்கு தெரிவிக்க வேண்டும்.

Tags :
Advertisement