முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!… மிக மோசமான காற்று மாசு!… கல்வி அமைச்சர் அறிவிப்பு!

08:26 AM Nov 06, 2023 IST | 1newsnationuser3
Advertisement

டெல்லியில் நிலவிவரும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக வரும் 10 ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறுகையில், காற்று மாசின் நிலைமையைக் கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறலாம் என்றும் அவர் கூறினார். டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபாடு சுகாதார அடிப்படையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10-ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, டெல்லியின் ஷாதிபூர் பகுதியில் உள்ள மக்கள் அதிகபட்ச மாசுபாட்டை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக காற்றின் தர அளவு மோசமாக உள்ளது. டெல்லி குதுப்மினார் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெற்கு டெல்லி பகுதியில் மூடி படர்ந்த புகை மூட்டம் போல காட்சியளித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்று மாசுபாடு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு நவம்பர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Extension of holidays for schoolsWorst air pollutionடெல்லி கல்வி அமைச்சர் அறிவிப்புபள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்புமிக மோசமான காற்று மாசு
Advertisement
Next Article