வெடிக்கும் போராட்டம்..!! நாளை OPD மற்றும் OT சேவைகளை நிறுத்துவதாக FAIM அறிவிப்பு..!
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆசிரிய சங்கம் (FAIM) நாளை OPD மற்றும் OT சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும் மாணவர்களும், மருத்துவர்களும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற பல மாநிலங்களும், தெலுங்கானாவில் உள்ள சில மருத்துவர்கள் சங்கங்களும் அனைத்து சேவைகளையும் முற்றிலுமாக மூடுவதாக தெரிவித்தன. பல இடங்களில் மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.மேலும் நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆசிரிய சங்கம் (FAIM) நாளை OPD மற்றும் OT சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (FAIM) ஆசிரிய சங்கம், டெல்லி எய்ம்ஸ் இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில், குடியுரிமை மருத்துவர் சம்பந்தப்பட்ட கொடூரமான சம்பவத்தின் வெளிச்சத்தில், எங்கள் நிறுவனத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய "மத்திய பாதுகாப்புச் சட்டத்தை" அவசரமாக அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.
பணியில் இருப்பவர்களுடன் இன்று அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது, மேலும், அவசர மருத்துவ சேவைகள், அவசரகால OT, ICU மற்றும் வார்டுகள் தவிர, எந்த வழக்கமான மருத்துவமனை சேவைகளும் (OPD/OT/Laboratory) ஒற்றுமையுடன் நாளை செயல்படாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நாளை OPD சேவைகளுக்குத் திட்டமிடப்பட்ட நோயாளிகளுக்கும், இது குறித்து தெரிவிக்கப்படுவதையும் நாங்கள் உறுதிசெய்துள்ளோம், மேலும் சிரமத்தைக் குறைக்க அவர்களின் சந்திப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவசரகால சேவைகள் தொடர்ந்து சீராகச் செயல்படுவதை நாங்கள் உறுதி செய்வோம், இதனால் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கவனிக்கப்படாமல் விடப்படுவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.