பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!! சாத்தூரில் அதிர்ச்சி..!!
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்களும் நடைபெறும். இதுதொடர்பாக எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில், இன்று (ஜூன் 29) சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று வார இறுதி நாட்கள் என்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பெரும் உயிர்சேதம் தடுக்கப்பட்டுள்ளது. 3 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர், வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு தயாரிக்க வெடி மருத்து கலவை உருவாக்கியபோது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : Tasmac | டாஸ்மாக் கடைகளில் அதிரடி கட்டுப்பாடு..!! இனி ஒருவருக்கு எத்தனை பாட்டில் தெரியுமா..?