ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெடித்த பேஜர்கள்!. 11 பேர் பலி!. 3000 பேர் காயம்!. குண்டுவெடிப்பின் அதிர்ச்சி காட்சிகள்!
Lebanon: லெபனான் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் கையடக்கப் பேஜர்கள் வெடித்ததில் ஹிஸ்புல்லா குழுவினர் உட்பட 11 பேர் பலியானார்கள். ஈரான் தூதர் கிட்டத்தட்ட 3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இதுதரப்பினருக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. இந்த போர் தற்போது லெபனான், சிரியா பகுதிகளுக்கும் பரவி உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹிஸ்புல்லா குழுவினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் படையும் சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் நேற்று திடீரென ஹிஸ்புல்லா போராளிகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் மறைமுகமாக நடந்தது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதே போல் பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்து சிதறியதால் லெபனான் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொது இடங்களில், வீடுகளில், மார்க்கெட்டுகளில் நின்று கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென பேஜனர்கள் வெடித்ததால் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள சில ஹிஸ்புல்லா போராளிகளும் படுகாயம் அடைந்தனர்.
11 பேர் பலியானார்கள். 2800 பேர் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்தனர் என்று லெபனான் அதிகாரி தெரிவித்தார். ஹிஸ்புல்லா குழுவினர் வைத்திருந்த பேஜர்களை குறிவைத்து வெடிக்கச் செய்ததால், நவீன தொழில்நுட்பம் மூலம் இது இஸ்ரேல் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று லெபனான் அதிகாரி தெரிவித்தார். இந்த பயங்கர தாக்குதலில் லெபனானில் உள்ள ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் படுகாயம் அடைந்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் பேஜர்கள் திடீரென வெடித்து சிதறியதால் மக்கள் படுகாயம் அடையும் காட்சிகள் வைரலாக பரவியது.
இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர்களில் பலர் அந்த பகுதியில் தரையில் உருண்டு கதறிய வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே லெபனானின் சுகாதார அமைச்சகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவசர நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கும், பேஜர்களை வைத்திருக்கும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியது.
அதைவிட முக்கியமாக வயர்லெஸ் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் சுகாதாரப் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டது. பேஜர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல்களால் மருத்துவமனைகளில் உள்ள அவசர அறைகளில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். அவர்களில் பலருக்கு கைகால்களில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
Readmore: தேனில் ஊறவைத்து இந்த 3 உலர் பழங்களை சாப்பிடுங்கள்!. உடல் ஆரோக்கியம் ஆதிகரிக்கும்!.