காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கா? ஆபத்து.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!
சிறுவர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இப்படி டீயில் பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவதால், உடலுக்கு சில பிரச்சினைகள் வர சான்ஸ் இருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதனால் உடல் நலனில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்
பொதுவாகவே காலையில் எழுந்ததும் பலரும் வெறும் வயிற்றில் டீ, காபியுடன் பிஸ்கட் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இப்படி செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிறு காலையில் எழுந்தவுடன் சாப்பிடும் பிஸ்கட் செரிமான பிரச்சனையை உண்டாக்கக் கூடும். பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளை செமிக் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும். உப்பு சேர்க்கப்பட்ட குக்கிகள் உங்கள் ரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை.
அதேசமயம் வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். பச்சை மாவு பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் குக்கிகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த பிஸ்கட்டுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். எனவே, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து மற்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
Read more ; அதிகமாக சிரித்தால் ஆபத்து!. மரணத்தை ஏற்படுத்தும்!. என்ன காரணம்?