Exit poll 2024: தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடத்திற்கு முன்னேறும் பாஜக..! வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!
Exit poll 2024: தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடத்திற்கு முன்னேறும் பாஜக..! வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..! இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது.
18வது மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு உத்திர பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று( ஜூன் 1ஆம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் நிறைவுபெற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பெரும்பாலான நிறுவனங்கள், திமுகவிற்கு முதல் இடமும், பாஜகவிற்கு இரண்டாம் இடமும், அதிமுகவிற்கு 3வது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி,
ஏபிபி – சி வோட்டர்: திமுக கூட்டணி = 37 - 39, பாஜக கூட்டணி = 0 - 2, அதிமுக கூட்டணி = 0.
இந்தியா டுடே: திமுக கூட்டணி = 26 - 30, அதிமுக கூட்டணி = 6 - 8, பாஜக கூட்டணி = 1 - 3.
சி.என்.என்.நியூஸ் 18: திமுக கூட்டணி = 36 - 39, பாஜக கூட்டணி = 1 - 3, அதிமுக கூட்டணி = 2.
டிவி 9 : திமுக கூட்டணி = 35, பாஜக கூட்டணி = 4, அதிமுக கூட்டணி = 0.
ஏபிபி: திமுக கூட்டணி = 37 - 39, பாஜக கூட்டணி = 2, அதிமுக கூட்டணி = 0.
ஜன்கி பாத்: திமுக கூட்டணி = 34 - 38, பாஜக கூட்டணி = 5, அதிமுக கூட்டணி = 1.