முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இது தெரியாம போச்சே..‌.! இந்த திட்டத்தில் நிலம் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு...! முழு விவரம்...

06:52 AM Dec 13, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, 50 சதவீதம் மானியத்துடன், கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் (6 சதவீதம்) கடனாக பெற்று வழங்கப்படும்.

Advertisement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள், விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5.00 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டனத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானிய தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிட வகுப்பினர் தாட்கோ இணையதளமான www.application.tahdco.com என்ற முகவரியிலும், பழங்குடியின வகுப்பினர் www.fast.tahdco.com என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

Tags :
Adi dravidarLand registrationSubcidy land
Advertisement
Next Article