For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேப்டன் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!! வெளியான அறிவிப்பு..!!

05:52 PM Dec 11, 2023 IST | 1newsnationuser6
கேப்டன் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி செயற்குழு  பொதுக்குழு கூட்டம்     வெளியான அறிவிப்பு
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த மாதம் 18ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் உள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் நடைபெற்றது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த சூழல், விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. இந்நிலையில், வரும் 14ஆம் தேதி வியாழக்கிழமை தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், வரும் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement