For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு!… பிரபல பாலிவுட் நடிகர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு!

08:40 AM Apr 14, 2024 IST | Kokila
பரபரப்பு … பிரபல பாலிவுட் நடிகர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு
Advertisement

Salman Khan: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு அருகில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மும்பை பாந்த்ர பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மும்பை கிரைம் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதிகாலை 5 மணி அளவில் 2 மர்மநபர்கள் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதும் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுடப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக மிரட்டல் உள்ள நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: அதிகரித்த வேலையின்மை!… வெற்றி யாருக்கு?… மோடி VS ராகுல் காந்தி!… 19 மாநில கருத்துக் கணிப்பு!

Advertisement