For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரானில் பரபரப்பு!. உள்ளாடைகளுடன் உலா!. ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக போர்க்கொடி!. மாணவி கைது!

Excitement in Iran! Walk in underwear! A battle flag against dress code! Student arrested!
06:54 AM Nov 04, 2024 IST | Kokila
ஈரானில் பரபரப்பு   உள்ளாடைகளுடன் உலா   ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக போர்க்கொடி   மாணவி கைது
Advertisement

Iran: ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆடைகளை களைந்து அரைநிர்வாணமாக உலா சென்ற பல்கலை. மாணவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக பல கடுமையான விதிகள் உள்ளன. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் ஹிஜாப்பை சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த சிறப்பு பாதுகாப்பு படையினர் அந்த மாணவியை பொது இடத்தில் வைத்து அடித்து எச்சரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் அரை நிர்வாணமாக அங்குமிங்கும் நடந்தார். தனது உடலையே போராட்ட ஆயுதமாக்கினார். தகவலறிந்த போலீசார் உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து மாணவியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த மாணவி கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறி உள்ளது. தற்போது அந்த மாணவி ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும், அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த மாணவியை வைத்திருக்கும் இடத்தை போலீசார் வெளியிடவில்லை.

இதற்கிடையே, மாணவி அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன. மாணவியின் தைரியத்தை பாராட்டிய பலரும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவி துன்புறுத்தப்படலாம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க பல சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன. ஏற்கனவே கடந்த 2022ல் மாஷா அமினி எனும் இளம்பெண் ஹிஜாப் அணியாததால் சிறப்பு பாதுகாப்பு படையினர் தாக்கியதில் பலியானார். அதன் பின் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் 550க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Readmore: உலகமே எதிர்பார்ப்பு!. நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்!. கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் தொடர் முன்னிலை!

Tags :
Advertisement