உடலில் இந்த சத்து அதிகமானால் இதயநோய் ஏற்படுமா.? மருத்துவர்களின் எச்சரிக்கை.!
நாம் உண்ணும் பல்வேறு உணவுகளும் ஊட்டச்சத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் உணவுகளை உண்டு வருகிறோம். ஆனால் நம் உடலில் ஒரு சில ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியானால் அதுவும் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருக்கும் புரோட்டின் அளவுக்கு அதிகமானால் உடலில் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
புரோட்டீன் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்றாகும். புரோட்டின் உடலில் அமினோ அமிலங்களை உருவாக்கி உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கவும், சீராக செயல்படவும் உதவுகிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவற்றில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. இந்த ப்ரோட்டினை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்.
1. அளவுக்கு அதிகமாக ஒருவர் புரோட்டின் சத்தை எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகமாகி இரத்த நாளங்களில் கொழுப்பு சேருகிறது. இதனால் உடலில் பல்வேறு பாகங்களுக்கும் தேவையான இரத்த ஓட்டம் சீராக செயல்பட தடுக்கிறது. மேலும் இதனால் மாரடைப்பு, ரத்தக்குழாய்களில் அடைப்பு, நெஞ்சுவலி போன்ற இதய நோய்கள் ஏற்படுகின்றன.
2. பலரும் உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக கார்போஹைட்ரேட் அளவை குறைத்து புரோட்டினை அதிகமாக எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த ப்ரோட்டின் உடலில் அதிகமாகும் போது வயிற்றில் புண் ஏற்பட்டு, வாய் துர்நாற்றம் ஏற்படும்.
3. புரோட்டின் சத்து இருக்கும் இறைச்சி வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது புற்றுநோய் செல்கள் உடலில் அளவுக்கு அதிகமாக உருவாகின்றன என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. புரோட்டினை அதிகமாக எடுத்து வந்தால் உடலில் நார்ச்சத்து குறைந்து செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
5. அளவுக்கு அதிகமாக ஒருவர் புரோட்டின் எடுத்துக் கொள்ளும் போது முதலில் சிறுநீரகம் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான புரோட்டினை வெளியேற்றும் முயற்சியில் வேகமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சிறுநீரகம் கடினமாக வேலை செய்ய வேண்டியது இருப்பதால் புரோட்டின் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது செயலிழக்கும் வாய்ப்பு அதிகம்.