For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய் கட்சியில் இணையும் EX அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

It has been reported that Vijay has agreed to include 12 former ministers, MLAs and MPs in Thaveka.
05:22 PM Aug 16, 2024 IST | Chella
விஜய் கட்சியில் இணையும் ex அமைச்சர்கள்  எம்பிக்கள்  எம் எல் ஏக்கள்    வெளியான பரபரப்பு தகவல்
Advertisement

விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் வரை, கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வராது என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

இப்படம் வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. முன்னதாக சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22ஆம் தேதி விஜய் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு கட்சிக்கொடி, கொள்கைகள், தீர்மானங்கள் தயாராகி வருகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் 12 பேரை தவெகவில் இணைத்துக்கொள்ள விஜய் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Read More : அதிர்ச்சி..!! பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement