என்னையா இது ஓபிஎஸ்-க்கு வந்த கஷ்டகாலம்.! திமுகவில் இணைந்து விடுவதாக மிரட்டும் மகன்… குழப்பத்தில் ஓ.பன்னீர்செல்வம்.!
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிறைக்குச் சென்ற போது அவர் முதலமைச்சராக நியமித்தவர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது இவர் அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். இவரது பதவியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளால் பறிக்கப்பட்டிருக்கிறது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் இவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. ஆக இருக்கிறார். நடைபெற இருக்கின்ற 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட இவரது இளைய மகன் ஜெயப்பிரதீப் விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும் அந்தத் தொகுதியில் மீண்டும் நானே போட்டியிடுவேன் என ரவீந்திரநாத் விடாப்பிடியாக இருக்கிறார்.
இது தொடர்பாக தனது இரு மகன்களையும் ஓபிஎஸ் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ரவீந்திரநாத் தனக்கு தேனி தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சொந்தக் கட்சியினரால் ஓரம் கட்டப்பட்ட நிலையில் தற்போது இவரது மகன்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை அவரது அரசியல் வாழ்க்கையில் மீண்டும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.