முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அவங்க திறக்கலாம்.. நாங்க பூட்டியாச்சு.." பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

04:40 PM Feb 07, 2024 IST | 1newsnationuser7
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று வந்த அதிமுக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு பிஜேபி கட்சியுடன் உறவையும் முறித்துக் கொண்டது. இனி எந்த காலத்திலும் பிஜேபியுடன் கூட்டணி இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழகத்தில் அதிமுக கட்சிக்கு தங்களது கதவு எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என கூட்டணிக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் . அப்போது பதிலளித்த அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார் " அதிமுக கட்சி தொண்டர்களின் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்டது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை. அதிமுக பிஜேபியுடன் என்றும் கூட்டணி அமைக்காது. பிஜேபி கூட்டணிக்கான கதவை திறந்து வைக்கலாம். ஆனால் அதிமுகவின் கதவு பிஜேபிக்காக மூடப்பட்டுவிட்டது. அது ஒரு போதும் திறக்காது என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKamit shahBJPJeya kumarpolitics
Advertisement
Next Article