For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாத்ரூம் வீடியோவை லீக் செய்த முன்னாள் காதலன்! - இவ்வளவு கீழ்த்தரமானவரா..? பிரபல நடிகை ஆதங்கம்

07:14 PM May 17, 2024 IST | Mari Thangam
பாத்ரூம் வீடியோவை லீக் செய்த முன்னாள் காதலன்    இவ்வளவு கீழ்த்தரமானவரா    பிரபல நடிகை ஆதங்கம்
Advertisement

குளியலறையின் தான் எடுத்த வீடியோவை, தனது முன்னாள் காதலர்தான் சமூகவலைதளங்களில் வெளியிட்டதாகவும், அவர் இவ்வளவு கீழ்த்தரமானவர் என்று தான் நினைக்கவில்லை என்றும், சர்ச்சைப்புகழ் நடிகை தெரிவித்துள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை பூனம் பாண்டே. இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். சமூக வலைத்தளங்கள் மூலமாக இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். மாடலாகவும் நடிகையாகவும் பணியாற்றி வரும் இவர், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் ஜெயித்தால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுகிறேன் எனக்கூறி மிகவும் பிரபலமானவர். அவர் பேசிய இந்த விஷயம் பரபரப்பையும் சலசலப்பையும் கூடவே சர்ச்சையையும் கிளப்பியது.

2013ஆம் ஆண்டு நஷா என்கிற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பண்டே. இவருக்கு தனி இணையதளம் ஒன்று இருக்கிறது. இந்த இணையத்தளத்தில் கவர்ச்சி மற்றும் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பேசி அதன் மூலம் பிரபலமானவர் பூனம் பாண்டே.

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. சமீபத்தில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டதாக அதிர்ச்சி பதிவு ஒன்று பூனமின் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு சில நாட்களுக்குப் பின்பு தான் இறக்கவில்லை என்று சொன்ன பூனம், கருப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் அவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதற்காக பூனத்தை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர். பலரது உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார் என்று சொல்லி அவர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, பூனமின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தனது முன்னாள் காதலன் தான் வெளியிட்டார் என பூனம் தற்போது கூறியுள்ளார். அவர் கூறுகையில், “தனது முன்னாள் காதலனுடன் ஒரே வீட்டில் வசித்தபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது அவர் என்னை கொலை செய்ய முயன்றதால், நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன். அப்போது எனது செல்போனை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். இப்போது எனது செல்போனில் உள்ள குளியல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிட்டான். அவன் இவ்வளவு கீழ் தனமானவன் என நான் நினைக்கவில்லை” என கூறியிருந்தார்.

தமிழகமே…! வீட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்…! அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்…!

Tags :
Advertisement