Election 2024 | "பீஃப் சாப்பிடுபவர்களுக்கு பீப் ஒலி பதிலடி கொடுக்கும்…" பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சை பேச்சு.!!
Election: இந்தியாவில் 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தல்(Election) தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் உள்ள 13 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா பார்ட்டி ஆகியோருடன் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கிறது.
இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு வாக்கு இயந்திரத்தின் பீப் ஒலி பதில் கொடுக்கும் என தெரிவித்திருக்கிறார். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் உவைசியின் வகுப்புவாதா அறிக்கையை போன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி உவைசிக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா.? அல்லது உவைசி காங்கிரசின் பிடிமாக செயல்படுகிறாரா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இருவரின் கொள்கைகளும் ஒரே போன்று மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு பலத்த கண்டனம் எழுந்திருக்கிறது.