முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”எல்லாம் Election முடியுற வரைக்கும்தான்”..!! பொதுமக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!

08:42 AM Apr 13, 2024 IST | Chella
Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின் அதிரடி மாற்றம் வரப்போகிறது.

Advertisement

நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். எனவே, யார் வெற்றி பெறுவார் என தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆட்சி மாற்றம் வருமா? வராதா? என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20% வரை உயர்த்தப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டும் கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இரவு முழுவதும் AC-யை போட்டு தூங்குறீங்களா..? என்னென்ன ஆபத்துகள் வரும் தெரியுமா..?

Advertisement
Next Article