முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஒருசிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்பாக முடியாது’..!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

08:23 AM Dec 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஒருசிலர் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர், கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னை மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில், ஒரு குடும்பத்தினர் மட்டும் குடிநீர் மற்றும் கழிவுநீருக்கான கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறி ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை எதிர்த்து அந்த குடியிருப்பில் வசிக்கும் எஸ்.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்துள்ள உத்தரவில், “குடியிருப்பில் வசிக்கும் ஒருசிலர் உரிய கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது. ஒருவருக்காக மற்ற குடும்பத்தினரை கஷ்டப்படுத்த முடியாது. கட்டணத்தை யார் செலுத்த வில்லையோ அவரிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்பாக முடியாது. எனவே, அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைத் துண்டிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

Tags :
அடுக்குமாடி குடியிருப்புசென்னைசென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Next Article