உங்கள் துணைக்கு உங்கள் மீது உண்மையில் காதல் உள்ளதா? எப்படி கண்டுபிடிப்பது? - உளவியல் பார்வை..
நீங்கள் காதலிக்கிறீர்கள் அல்லது திருமண உறவில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்காகவே இந்தக் கட்டுரை. உங்கள் காதல் துணை உங்கள்மீது அன்பு காட்டுகிறார் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களை செய்வதில்லை என புலம்புகிறீர்கள் எனில் தெளிவு கொடுக்கவே இந்தக் கட்டுரை. உங்களது கணவர் அல்லது காதலர் உங்களை காதலிப்பதை போல் தோன்றினாலும் அவர்களின் சில நடவடிக்கைகளை வைத்து அவர்கள் உண்மையாக காதலிக்கிறார்களா இல்லையா என்பதை மிக எளிதாக கண்டறிந்து விடலாம். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருத்தல் : ஆண்கள் எப்போதுமே தங்களது உணர்வை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் கண்டிப்பாக தங்களுடைய வாழ்க்கை துணை என்று வரும்போது தன்னுடைய கஷ்ட நஷ்டம் அனைத்தையும் வாழ்க்கை துணையிடம் தான் பகிர்ந்து கொள்வார்கள். அதுபோல தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் மறைத்தோ அல்லது உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தாலும் அவர் உங்களை முழுமையாக காதலிக்கவில்லை என்று அர்த்தம் என்று சொல்லலாம்.
முக்கியத்துவம் கொடுக்காமல் இருத்தல் : உங்களை உண்மையாக காதலிக்கும் ஒருவர் தன்னுடைய வாழ்வில் எப்போதும் உங்களை தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதுவார். உங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவை பேணி காப்பதற்கோ அல்லது உங்களை முக்கியமாக கருதாமலோ இருந்தால் அவர் தன்னுடைய முழு காதலையும் உங்கள் மீது வைக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
பாசம் இல்லாமல் இருப்பது : ஒரு ஆண் உங்களை உண்மையாகவே காதலித்தால் பல்வேறு வழிகளில் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அவர் பாசமாக இல்லாமலும் அல்லது உடலளவில் கூட உங்களுடன் நெருக்கமாக இல்லாமல் இருந்தால், அவர் உண்மையிலேயே உங்கள் மீது பாசம் இருப்பது போல் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் பேச்சை கவனிக்காமல் இருப்பது : உங்களை உண்மையாக காதலிக்கும் ஒருவர் நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சையும் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார். ஒருவேளை நீங்கள் பேசும்போது ஆர்வம் இல்லாமல் இருப்பதோ அல்லது உங்கள் பேச்சை பிடிக்காதது போல் நடந்து கொண்டாலும் அவர் உங்களை காதலிப்பது போல் நடித்துக் கொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உங்களுக்காக எதுவும் செய்யாமல் இருப்பது : உண்மையில் உங்களை காதலிக்கும் ஒரு ஆண் தன்னுடைய எதிர்காலத்துடன் உங்களுடைய எதிர்காலத்தையும் சேர்த்து பல திட்டங்களை போட்டு வைத்திருப்பார்கள். ஒருவேளை அவரது எதிர்கால திட்டங்களில் உங்களது பகுதியோ அல்லது உங்களைப் பற்றிய அக்கறையோ இல்லாமல் இருந்தால் அவர் உங்கள் மீது முழு பாசத்துடன் இல்லை என்று தான் அர்த்தம்.