’விஜய்யே வெளிய போக சொன்னாலும் நான் போக மாட்டேன்’..!! பக்கபலமா இருப்பேன்..!! 2026 தேர்தலில் போட்டி..!!
நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த நிலையில், அது தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. கொடியில் முரண்பாடான சின்னங்கள் இருப்பதால், விஜய் மீது தேசிய குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக தரப்பில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. கொடியில் பயன்படுத்திய சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்தில் இருந்து கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்க தயார் என தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், திரையரங்கில் படம் பார்க்க சென்ற கூல் சுரேஷிடம் விஜயின் அரசியல் கட்சி கொடியை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கூல் சுரேஷ், யானையாவது பூனையாவது விஜய் எப்போதும் வெற்றி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் விஜய் யானையாகவும் இருக்கிறார். மற்றொரு பக்கம் பூனையாகவும் இருக்கிறார். யோசிப்பதில் பூனையாகவும், பலத்தில் யானையாகவும் இருக்கிறார் என்பதைத் தான் இப்படி கூறினேன் என்றார். மேலும், அவருடைய கட்சியில் நான் கூட்டணி அமைக்க தயார் என்றும் வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலை அவருடன் சேர்ந்து சந்திக்க விரும்புவதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளது. ஒருவேளை விஜய்யே என்னை நிராகரித்தாலும் வெளியில் இருந்து அவருக்கு பக்கபலமாக உறுதுணையாக நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Read More : ’இந்த போன் கால் வந்தால் உஷாரா இருங்க’..!! எச்சரிக்கும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்..!!