முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரு பெண் கணவர் வீட்டில் வசித்தாலும் தனது பெற்றோர் வீட்டில் வசிக்கும் உரிமையை பறிக்க முடியாது..!! ஐகோர்ட் அதிரடி..!!

07:16 AM Nov 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஒரு திருமணமான பெண் தனது கணவனின் வீட்டில் வசித்தாலும், பெற்றோரின் வீட்டில் வசிக்கும் உரிமையை மறுத்ததாகக் கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு, ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பித்தனர். இவர்களில் சரண்யாவுக்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜி.மாயக்கண்ணன், சரண்யா குறிப்பிட்ட பஞ்சாயத்தில் வசிப்பவர் அல்ல என்றும், தவறான தகவல் மூலம் பதவியைப் பெற்றுள்ளதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார்.

அதாவது, ஊராட்சி செயலாளர் பணி நியமனத்திற்கான நிபந்தனைகளில் வேட்பாளர் உள்ளூர் வாசியாக இருக்க வேண்டும் என்பதும் விதி. ஆனால், சரண்யா தனது திருமணத்திற்குப் பிறகு தனது வீட்டை கணவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆகையால், அவரை தகுதியான வேட்பாளராகக் கருத முடியாது என மாயக்கண்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தலைமையிலான அமர்வு, "சாதாரணமாக ஒரு திருமணமான பெண் தனது கணவனின் வீட்டில் வசித்தாலும், பெற்றோரின் வீட்டில் வசிக்கும் உரிமையை மறுத்ததாகக் கருத முடியாது. திருமணத்திற்குப் பிறகு தனி ரேஷன் கார்டு பெறுவதற்காக, அவரது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு, கணவரின் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதை வைத்து மட்டும் ஒரு திருமணமான பெண் தன் பெற்றோரின் விசிப்பிடத்துடனான உறவைத் துண்டித்துவிட்டார் என்று சொல்லிவிட முடியாது. அவருடைய பெற்றோர் வீட்டைப் பொறுத்தமட்டில் அவரது குடியிருப்பு நிலை ஒருமுறை மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. திருமண விதிகள் ஒரு பெண்ணுக்கு அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை" எனத் தெரிவித்தது.

மேலும், இன்றைய உலகில், ஆண்களும் பெண்களும் கல்வி அல்லது தொழில் நிமித்தம் பல இடங்களுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், இன்னும் தங்கள் சொந்த இடத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கருதுகின்றனர். ஒரு பெண்ணின் விருப்பமே அவர் அதற்குரிய குடியிருப்புச் சான்றிதழைப் பெற போதுமானது என்று நீதிமன்றம் கூறியது. திருமணமான பெண் தன் சொந்த ஊரை முற்றிலுமாக கைவிட்டு, கணவனின் இடத்தையே தன் வசிப்பிடமாக கருதுகிறார் என்ற கருத்து உள்ளது.

ஒரு திருமணமான பெண் தனது வேலை, வணிகம் அல்லது வேறு காரணங்களுக்காக தனது பிறந்த வீட்டிற்கும் திருமண வீட்டிற்கும் இடையில் எந்த இடத்தை வசிப்பிடமாக தேர்வு செய்தாலும், அவரது விருப்பத்தைப் பயன்படுத்துவதை எதுவும் தடுக்க முடியாது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags :
ஊராட்சி செயலாளர் பணிசென்னைசென்னை உயர்நீதிமன்றம்நீதிபதி மஞ்சுளாவேலை நிமித்தம்
Advertisement
Next Article