For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூரோ 2024!. அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் எது?.

Euro 2024!. Which teams advanced to the semi-finals?
05:45 AM Jul 08, 2024 IST | Kokila
யூரோ 2024   அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் எது
Advertisement

Euro 2024: யூரோ 2024 கால்பந்து தொடரின் அரயிறுதிப் போட்டியில் ஸ்பெயின் - பிரான்ஸ், நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

Advertisement

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, நடப்பு சாம்பியனான இத்தாலி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, அல்பேனியா அணிகள் இடம்பெற்றன.

இதன் நாக் அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் விளையாடின. நாக்அவுட் போட்டிகள் முடிவுற்று காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வந்தன். முதல் காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தொடரை நடத்தும் ஜெர்மனி அணியை வீழ்த்திய ஸ்பெயின் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது காலிறுதி ஆட்டம் போர்ச்சுகல் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் முழு ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்க தவறின.

இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில் 5-3 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் யூரோ சாம்பியன்ஷிப்பில் ஆறாவது முறையாக அரையிறுதி விளையாடும் அணி என்ற பெருமை பெற்றது. 2021 யூரோ சாம்பியன்ஷிப் நாக்அவுட் தோல்வி, 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்விக்கு பின்னர் கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி பெரிய தொடரில் முக்கிய வெற்றியை பெற்றுள்ளது.

யூரோ சாம்பியன்ஷிப்பில் 8 முறை அரையிறுதி வரை முன்னேறிய ஜெர்மனி அணி, அதிக முறை அரையிறுதி விளையாடிய அணியாக இருந்து வருகிறது. முன்னதாக, போர்ச்சுகல் அணியின் மூன்றாவது பெனால்டி ஷூட் அவுட் முயற்சியில் ஜோவோ பெலிக்ஸ் கோல் அடிக்க தவறினார். அத்துடன் பிரான்ஸ் தனது 5 வாய்ப்பையும் கோல் ஆக்கியதால், போர்ச்சுகல் நான்கு கோல் முயற்சியில் தோல்வியை தழுவியது.

3வது காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஸ்விட்சர்லாந்து அணியில் Breel Embolo 75வது நிமிடத்திலும், இங்கிலாந்து அணியில் Bukayo Saka 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த நிலையில், கூடுதல் நேரம் கொடுத்தான் இரு அணிகளும் வெற்றிக்கான இரண்டாவது கோலை அடிக்கவில்லை. இதையடுத்து, பெனால்டி ஷூட்அவுட்டில் இங்கிலாந்து அணி அணைந்து 5 கோல்களையும் அடித்து ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.

ஸ்விட்சர்லாந்து அணி பெனால்டி ஷூட்அவுட்டில் நான்கு முயற்சிகளில் ஒன்றை இழந்த நிலையில், அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது. இங்கிலாந்து அணியில் Trent Alexander-Arnold வெற்றிக்கான ஐந்தாவது பெனால்டி ஷூட்அவுட்டை கோலாக மாற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதேபோல், பெர்லினில் நடந்த 4வது காலிறுதிப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையடுத்து வருகிற 10 ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளும், வருகிற 11 ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் வரும் 15ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

Readmore: இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லனா சிக்கல் தான்!!

Tags :
Advertisement