யூரோ 2024!. ரொனால்டோவுக்கு அதிர்ச்சி!. ஜார்ஜியா, துருக்கி அணிகள் த்ரில் வெற்றி!.
Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அணியும், மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசை வீழ்த்தி துருக்கி அணியும் அபார வெற்றி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் குரூப் F பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜார்ஜியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ஜார்ஜியா அணி வீரர் க்விச்சா குவரட்ஸ்கெலியா(KHVICHA KVARATSKHELIA) கோல் அடித்து அசத்தினார்,
இதனைதொடர்ந்து தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்ச்சுகல் அணி கேப்டனான ரொனால்டோ(CRISTIANORONALDO) ஆட்டத்தின் 28 நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்றார். அவரை தொடர்ந்து பெட்ரோ நெட்டோ-வும்(PEDRO NETO) ஆட்டத்தின் 44 நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்றார். இருப்பினும் போர்ச்சுகல் அணியால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதனை தொடர்ந்து ஜார்ஜியா அணிக்கு போட்டியின் 57வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஜார்ஜியா அணி தனது கோலாக மாற்றிக் கொண்டது. போர்ச்சுகல் அணி எவ்வளவோ முயற்சி செய்தும் கோல் கணக்கை கூட தொடங்க முடியவில்லை. இதன்மூலம் Euro 2024 கால்பந்து தொடரின் குரூப் F பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜார்ஜியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு குரூப் F பிரிவு போட்டியில் துருக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு (Czechia) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
Readmore: இரவிலும் விழித்துக் கொண்டிருக்கும் மக்கள்!! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..