யூரோ 2024 காலிறுதி போட்டி: ஸ்பெயின் வெற்றி…! போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி..!
2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த தொடரை நடத்தும் ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இருஅணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணியின் வீரர் ஒல்மோ முதல் கோலை பதிவு செய்தார். இதனையடுத்து கோல் அடிக்கும் முயற்சியில் ஜெர்மனி அணி வீரர்கள் இருந்தனர். ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃபுல்க்ரக் அடித்த ஷாட் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. கிட்டத்தட்ட கோல் வாய்ப்பை ஜெர்மனி மிஸ் செய்தது. இருந்தும் 89-வது நிமிடத்தில் ஜெர்மனியின் புளோரியன் விர்ட்ஸ் கோல் அடித்தார். இரு அணிகளும் 1-1 என இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் (எக்ஸ்ட்ரா டைம்) வழங்கப்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில், 119வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மெரினோ கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது காலிறுதி போட்டியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியும், கைலியன் எம்பாப்பே தலைமையிலா பிரான்ஸ் அணிகளும் மோதின. ரொனால்டோவின் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் போர்ச்சுகல் அணி இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஸ்பெயின் அணி போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஹாம்பர்க்கில் உள்ள வோக்ஸ்பார்க் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், 120 நிமிட முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. இதில் சிறப்பாக் செயல்ப்பட்ட பிரான்ஸ் அணி வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டில், ஐந்து முறையும் கோல் அடித்து அசத்தினார். ஆனால் போர்ச்சுகல் அணி தனது முதல் நான்கு முயற்சிகளில் ஒரு முறை கோல் அடிக்க தவறியதால் 5 - 3 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டியில் ஷாப்பிங் அணியை எதிர்கொள்கிறது பிரான்ஸ் அணி.
Read More: புத்தர் சிலையை வீட்டில் வைக்கலாமா? சிரிக்கும் புத்தரை இந்த திசையில் வைத்தால் என்னாகும்? ஆஹா அற்புதம்