For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூரோ 2024!. நெதர்லாந்து அணி வெற்றி!. 3-0 கணக்கில் ருமேனியா தோல்வி!

Euro 2024!. Netherlands team win! Romania lost 3-0!
06:20 AM Jul 03, 2024 IST | Kokila
யூரோ 2024   நெதர்லாந்து அணி வெற்றி   3 0 கணக்கில் ருமேனியா தோல்வி
Advertisement

Euro 2024: யூரோ கோப்பை தொடரில் 3-0 என்ற கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி, காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

ஜெர்மனியின் முனிக்கில் நேற்று நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் நெதர்லாந்து, ருமேனிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய 20 வது நிமிடத்தில் சைமன்ஸ் கொடுத்த பந்தை பெற்ற கோடி கேப்கோ, கோலாக மாற்ற, நெதர்லாந்து அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இதைச் சமன் செய்ய, ருமேனிய வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. மாறாக மீண்டும் அசத்தினர் நெதர்லாந்து அணியினர். போட்டியின் 83வது நிமிடத்தில் பந்தை லாவகமாக கொண்டு சென்ற கேப்கோ, ருமேனிய கோல் ஏரியாவுக்குள் இருந்த மாலெனுக்கு 'பாஸ்' செய்தார்.

பந்தை பெற்ற வேகத்தில், அப்படியே வலைக்குள் தள்ளி கோல் அடித்தார் மாலென். முடிவில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி நடைபெறும் காலிறுதிப்போட்டியில் துருக்கி அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: வாழ்க்கையில் இந்த மாதிரி இருக்கணும்னு நினைக்கிறீங்களா..? அப்படினா இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

Tags :
Advertisement