யூரோ 2024!. காலிறுதியில் பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் மோதல்!
Euro 2024: யூரோ' கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் 16 போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் காலிறுதி போட்டியில் மோதவுள்ளன.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) நடக்கிறது. இதுவரை ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்தநிலையில், செல்டோர்ப்பில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 85வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஜான் வெர்டோங்கன் 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதேபோல், ரவுண்ட் 16 போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஸ்லோவேனியா அணிகள் மோதின. எக்ஸ்ட்ரா டைமில் பெனால்டியை தவறவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்து அசத்தினார், இதன் மூலம், பெனால்டியில் ஸ்லோவேனியாவை போர்ச்சுகல் வென்றதால் இரண்டு யூரோ சாதனைகள் முறியடிக்கப்பட்டன. ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிவடைந்ததை அடுத்து, ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றிகள் மூலம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிப்போட்டியில் பிரான்ஸ் - போர்ச்சுகல் அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபாரம்!. இந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!. வைரலாகும் செல்ஃபி!.