For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூரோ 2024 கால்பந்து போட்டி!. பரபரப்பான முடிவு!. 2 ஆட்டங்கள் டிரா!.

Euro 2024 Football Tournament!. Exciting result!. 2 games draw!.
06:15 AM Jun 20, 2024 IST | Kokila
யூரோ 2024 கால்பந்து போட்டி   பரபரப்பான முடிவு   2 ஆட்டங்கள் டிரா
Advertisement

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் குரோஷியா-அல்பேனியா, ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

Advertisement

ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-10' குரோஷிய அணி, 66வது இடத்தில் உள்ள அல்பேனியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஆசனி துாக்கி அடித்த பந்தை அல்பேனியாவின் லேசி தலையால் முட்டி கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அல்பேனியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட குரோஷிய அணிக்கு 74வது நிமிடத்தில் ஆன்ட்ரேஜ் கிராமரிக் ஒரு கோல் அடித்தார். பின் 76வது நிமிடத்தில் அல்பேனியாவின் கிளாஸ் ஜாசுலா 'சேம்சைடு' கோல் அடிக்க, குரோஷிய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இதற்கு, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) கிளாஸ் ஜாசுலா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.

இதேபோல், ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அந்தவகையில், ஸ்டீவ் கிளார்க்கின் ஸ்காட்லாந்து அணி யூரோ 2024 இல் ஸ்காட் மெக்டோமினேயின் தொடக்க ஆட்டக்காரரை எக்ஸ்ஹெர்டன் ஷாகிரியின் ஸ்டன்னர் ரத்து செய்த பிறகு, சுவிட்சர்லாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் உள்ளது. இதன் விளைவாக, ஸ்காட்லாந்து ஒரு புள்ளியில் குழுவில் மூன்றாவது இடத்தில் உள்ளது,

Readmore: பருத்தியில் தயாரிக்கப்படும் இந்திய ரூபாய் நோட்டுகள்..!! ஆச்சரியமா இருக்கா..? உண்மை இதுதான்..!!

Tags :
Advertisement