For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூரோ 2024!. அடுத்தடுத்து டிராவில் முடிந்த 4 ஆட்டங்கள்!. வெளியேறியது செர்பியா!.

Euro 2024!. Consecutive games ended in a draw!. Serbia left!
08:39 AM Jun 27, 2024 IST | Kokila
யூரோ 2024   அடுத்தடுத்து டிராவில் முடிந்த 4 ஆட்டங்கள்   வெளியேறியது செர்பியா
Advertisement

Euro 2024: யூரோ' கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-சுலோவேனியா, டென்மார் - செர்பியா, உக்ரைன் - பெல்ஜியம், ருமேனியா - ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையேயான ஆட்டங்கள் அடுத்தடுத்து டிராவில் முடிந்தன.

Advertisement

ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-5' இங்கிலாந்து அணி, 57வது இடத்தில் உள்ள சுலோவேனியா அணியை சந்தித்தது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் சுலோவேனியாவின் பெஞ்சமின் செஸ்கோ தலையால் முட்டி கோலடிக்க முயற்சித்த பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்போர்டு கச்சிதமாக பிடித்தார்.

இதேபோல 30வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கேரி கேன் 'கோல் போஸ்ட்டை' நோக்கி துாக்கி அடித்த பந்தை சுலோவேனிய கோல்கீப்பர் ஜான் ஒப்லாக் பிடித்தார். முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+1வது நிமிடம்) இங்கிலாந்து வீரர் பால்மரின் கோல் அடிக்கும் முயற்சியை சுலோவேனிய கோல்கீப்பர் தடுத்தார். கடைசி வரை போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.

முனிக் நகரில் நடந்த மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் டென்மார்க், செர்பியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. 'சி' பிரிவு லீக் சுற்றின் முடிவில் ஒரு வெற்றி, 2 'டிரா' என 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இங்கிலாந்து 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது. தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இரு இடம் பிடித்த டென்மார்க், சுலோவேனியா அணிகளும் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தன. இரண்டு 'டிரா', ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்த செர்பிய அணி வெளியேறியது.

இதேபோல், குரூப் E பிரிவில் நடைபெற்ற உக்ரைன் - பெல்ஜியம் போட்டி 0-0 என்ற கோல் கணக்கிலும், ருமேனியா - ஸ்லோவாக்கியா போட்டி 1-1 என்ற கோல் கணக்கிலும் சமனில் முடிந்துள்ளது.

Readmore: Rain | ‘கொட்டித்தீர்க்கும் கனமழை’ – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

Tags :
Advertisement