யூரோ 2024!. நெதர்லாந்தை வீழ்த்தி அபாரம்!. இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் இங்கிலாந்து!
Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் நடப்பு சாம்பியன் இத்தாலி, தொடரை நடத்தும் ஜெர்மனி, ரொனால்டோவின் போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.
இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. முனிச் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இறுதியில் 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து வரும் திங்கள் கிழமை(ஜூலை 15) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: வரும் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல்…! கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!