யூரோ 2024!. இளம் வீரர் அதிரடி!. இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்!. பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி!
Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தில் முதல் அணியாக ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் நடப்பு சாம்பியன் இத்தாலி, தொடரை நடத்தும் ஜெர்மனி, ரொனால்டோவின் போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணியின் ராண்டல் கோலோ ஒன்பதாவது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தார். இருப்பினும், ஸ்பெயின் அணியின் இளம் வீரர் யமால் கோல் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த போட்டில் சமனில் சென்று கொண்டிருந்தது. இந்த கோலை தொடர்ந்து 4-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது. போட்டி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது. இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதிபெற்றது.
யூரோ கால்பந்தில் ஆறாவது முறையாக அரையிறுதியில் பங்கேற்றது ஸ்பெயின். இதில் 2020 தவிர, மற்ற 5 முறை பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள 2வது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி மோதவுள்ளது.