எத்தியோபியா நிலச்சரிவு!. பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்!. ஐ.நா. அதிர்ச்சி!
Landslide: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.நா. அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கனமழையைத் தொடர்ந்து தெற்கு எத்தியோப்பியா பிராந்திய மாநிலத்தில் உள்ள கோஃபா மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர், நான்காவது நாளாக தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக மத்திய பேரிடர் தடுப்பு பணிக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த பேரழிவில் சிக்கியவர்களில் பலி எண்ணிக்கை மேலும் 500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவில் மழைக் காலத்தின் போது நிலச்சரிவுகள் பொதுவானவை, இது ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உகாண்டாவின் மலைகள் நிறைந்த கிழக்கிலிருந்து மத்திய கென்யாவின் மலைப்பகுதிகள் வரை பரந்த கிழக்கு ஆபிரிக்கப் பகுதியில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுகின்றன. ஏப்ரலில், கென்யாவின் பிளவுப் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக வீடுகள் வழியாகச் சென்று ஒரு பெரிய சாலை துண்டிக்கப்பட்டதில் குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: நாடு முழுவதும் பாலிதீன் பைகளுக்கு கட்டாய தடை…! மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு…!