முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! திமுகவுடன் நேரடியாக களம் காணும் நாம் தமிழர்..!! வெற்றி வாய்ப்பு அதிகமாம்..!!

As for the Erode by-election, the direct confrontation with the DMK has created the image of the AIADMK as the main opposition party, surpassing the BJP and the BJP, as 'We are Tamils'.
04:25 PM Jan 13, 2025 IST | Chella
Advertisement

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், இம்முறை பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் விலகிக் கொண்டன.

Advertisement

தற்போது நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. இதனால் திமுக, நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், தேவையற்ற செலவை குறைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், சமீப காலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இத்தகைய சூழலில் இவர்களும் தேர்தலில் போட்டியிருந்தால், ஆளுங்கட்சியின் குறைகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக் காட்ட வாய்ப்பாக இருக்கும். ஆனால், அந்த விஷயத்தில் அதிமுக, பாஜக கோட்டை விட்டு விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக உடன் நேரடியாக மோதுவதால் அதிமுக, பாஜகவை தாண்டி பிரதான எதிர்க்கட்சி நாம் தமிழர் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. ஏனென்றால், திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்க பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் கிடையாது. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே விழும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் 7.65 சதவீதமும், 2023 இடைத்தேர்தலில் 6.35 சதவீதமும் வாக்குகளை பெற்றனர். தற்போது 10 சதவீதத்திற்கு மேல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் மூலம் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

Read More : பைக்கை திருடிய தலித் இளைஞர்..!! மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய ஊர் மக்கள்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

Tags :
அதிமுகஇடைத்தேர்தல்எதிர்க்கட்சிகள்நாம் தமிழர் கட்சிபாஜக
Advertisement
Next Article