For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

EPS-A.Rasa Challenge: தொடர்ந்து இபிஎஸ்-ஐ சீண்டும் ஆ.ராசா!… மோடியை எதிர்த்தால் சிறைக்குதான் செல்வார்!

09:10 AM Feb 20, 2024 IST | 1newsnationuser3
eps a rasa challenge  தொடர்ந்து இபிஎஸ் ஐ சீண்டும் ஆ ராசா … மோடியை எதிர்த்தால் சிறைக்குதான் செல்வார்
Advertisement

EPS-A.Rasa Challenge: தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆ.ராசா, “சர்வதிகாரியாள் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி பாசிசம் என்பதாகும்.இன்று இந்தியாவிலும் கொடுங்கோலாட்சியான பாசிசம் பரவ முயலுகிறது. அதனை எதிர்த்து போராடும் தலைவனாக நிற்பவர் தான் முதல்வர் மு க ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தில் எப்பொழுதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ.. அப்பொழுதெல்லாம் ஜனநாயகத்தை காக்க துடித்து எழும் ஒரே கட்சி திமுக தான்.

திமுககாரன் சிறை சித்திரவதைக்கு எல்லாம் அஞ்ச மாட்டான்.செந்தில் பாலாஜி வெளியே வருவார். பாஜகவின் முகத்திரையை கிழிப்போம். இருபது வருடமாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று உள்ளேன். எல்லா பிரதமரிடமும் பழகியுள்ளேன். ஆனால் இப்பொழுது உள்ள பிரதமர் மோடியை கடந்த ஐந்து வருடங்களாக நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பார்த்ததே இல்லை. மூன்றாம்வாதி அரசியல்வாதி போல மோடி பேசி வருகிறார்.

மிகப்பெரிய மோசடி பேர்வழியான அதானியை ஒரு பிரதமர் அரவணைக்கலாமா? 6500 கோடி ரூபாய் பாஜகவுக்கு தேர்தல் செலவுக்காக குவிந்துள்ளது. இவ்வளவு பணத்தை யார் கொடுத்தார்கள் என விசாரிக்க வேண்டும். அப்படி தீர விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் இந்தியாவில் பாதி பேர் அகதி ஆகிவிடுவார்கள்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கேள்வி..? வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை சீட்டுகள் ஜெயித்தாலும், மோடியை பிரதமர் வேட்பாளராக ஆக்க வாக்களிக்க மாட்டோம் என நெஞ்சில் துணிவிருந்தால் கூறட்டும். அப்படி கூறினால் அதிமுககாரன் அனைவரும் சிறையில் இருப்பான். மாநில பேரிடர் நிவாரணத் தொகை ஒரு பைசா கூட தரவில்லை. ஆனால் தந்து விட்டோம் என நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற பொய் பேசுகிறார்.

மோடி மீண்டும் பிரதமராக வந்தால், நாமெல்லாம் இந்தியாவில் இருப்போமா என்பது கேள்விக்குறியாகிவிடும். மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக ஆக்கி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டவாறு ஊர்வலமாக கூட்டி வந்தது காட்டுமிராண்டி கூட்டம். மோடி என்ன சொல்கிறார்… மணிப்பூரில் அமைதி நிலவுகிறது என பேசுகிறார். இந்த காட்டுமிராண்டித்தனமான ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதற்காக தான் திமுக பாடுபட்டு வருகிறது என்று பேசினார் ஆ.ராசா.

English summary:A. Raza continues to piss off EPS

Readmore:https://1newsnation.com/edappadi-palaniswami-accused-of-ex-administrator-sensationalism/

Advertisement